கோவை மே: 2
உலகெங்கும் மே முதல் நாளை உழைப்பாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் அதன் தலைவர் வெள்ளை நடராஜ் தலைமையில் தொழிலாளர்கள் தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் அமைந்துள்ள மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களோடு கொண்டாட முடிவு செய்யப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் சாலையோர தொழிலாளர்கள் என பல்வேறு வகையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களோடு இந்த தினத்தை கொண்டாடியதை தொடர்ந்து இந்த ஆண்டு மிகவும் அடித்தட்டு விளிம்பு நிலையில் சமூக மக்களுக்காக அர்ப்பணிப்போடு உழைத்துக் கொண்டிருக்கும் பிரிவினரைக் கண்டு அவர்களை மகிழ்விக்கும் பாராட்டும் விதமாக கொண்டாட முடிவு செய்து. அதன் படி பொள்ளாச்சி மயானத்தில் ஒவ்வொரு உயிர்களையும் அர்ப்பணிப்போடும், கருணையோடும், அடக்கம் செய்தும் .எரியூட்டியும்உன்னதமான பணியை செய்து வரும் மயான தொழிலாளர்களோடு அவர்களை மயானத்தில் சந்தித்து அவர்களின் இந்த தினத்துக்கான சிறப்பை கூறி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் இனிப்பு வழங்கியும். புத்தாடைகள் வழங்கி ரொக்கப் பரிசும் வழங்கியும் சிறப்பாக நிகழ்ச்சியை கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அங்கு பணிபுரிந்த குழி எடுக்கும் தொழிலாளர்கள், மற்றும் எரியூட்ட பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள், மிகுந்த ஆர்வமும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் நகர்மன்ற உறுப்பினர் எம்.கே.சாந்தலிங்கம் நேதாஜி இளைஞர் பேரவை விக்கி.சுந்தர்ராஜ் அப்துல் ஹமீது மற்றும் பரமசிவம் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.