By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி திடீர் போராட்டம்: போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி திடீர் போராட்டம்: போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதால் பரபரப்பு
தமிழ்நாடுதிண்டுக்கல்

நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி திடீர் போராட்டம்: போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதால் பரபரப்பு

Last updated: February 17, 2026 6:22 pm
February 17, 2026
48 Views
Share
SHARE

நிலக்கோட்டை, பிப். 17 –

நிலக்கோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி,திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் சுமார் 3 ஆயிரம் மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நிலக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரியில் படிக்கும் இளநிலை மற்றும் முதுநிலை 3-ம் ஆண்டு மாணவிகளுக்கு மட்டும் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், முதுநிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் தங்களுக்கு லேப்டாப் வழங்க கோரி கல்லூரி முன்பு நிலக்கோட்டை- வத்தலகுண்டு சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவிகளின் போராட்டத்தால், கல்லூரி முன்பு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அங்கு வந்தனர்.

அப்போது வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் கௌதமன் மற்றும் காவல் துறையினர் கல்லூரி மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் அய்யனார், நிலக்கோட்டை பேரூர் இணைச்செயலாளர் பிரேம், தமிழக வெற்றிக்கழக ஒன்றி நிர்வாகி ஸ்ரீவாசன் உள்ளிட்ட ஐந்து பேரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில், தங்களுக்கு லேப்டாப் வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவிகள் லேப்டாப் வழங்கவில்லை என்றால், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்க மாட்டோம் எனவும், தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் மாணவிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்
சிகை சீர்திருத்தம் செய்து தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி
சிறப்பு ரயில் ரத்தால் பயணிகள் பாதிப்பு; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கண்டனம்
11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது
கன்னியாகுமரி அருகே மூதாட்டி விஷம் தின்று தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இளம்பெண் குளிப்பதை படம் பிடித்து மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்த ராணுவ வீரர் கைது

May 21, 2025
28 Views
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் இனிப்பு
மும்மொழிக்கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி பாஜக கையெழுத்து இயக்கம்
எம்.சி.சி தொடக்கப் பள்ளி சுற்றுசூழல்களுக்கான அறிவியல் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account