சேலம், செப்.02.
சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாணவர்கள் புதுமையான சிந்தனைகளுடன் செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சென்னை மாற்றம் பவுண்டேஷன் நிறுவனர் சுஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.
விழாவில், பனிரெண்டாம் வகுப்பில் 180-க்கும் மேற்பட்ட கட்-ஆப் மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கே.ஐ.ஓ.டி. அறக்கட்டளை சார்பில் சுமார் ரூ.85 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நாலெட்ஜ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவரும், கல்லூரி செயல் தலைவருமான முனைவர் பி.எஸ்.எஸ். சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கே. விசாகவேல், கல்லூரியின் சிறப்பம்சங்கள் மற்றும் கடந்த கல்வியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கல்வி மற்றும் மாணவர் நலச் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் நாலெட்ஜ் அறக்கட்டளை உறுப்பினர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதிய கல்வியாண்டை தொடங்கிய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புதுமை சார்ந்த துறைகளில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.



