நாகர்கோவில், ஆகஸ்ட் 14 –
கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல், மார்த்தாண்டம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் உள்ளது. இங்கு 250 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ரெயின் கோட் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு எஸ். பி.ஸ்டாலின் ரெயின் கோட்டை வழங்கினார். ரெயின் கோட்டை பெற்றுக்கொண்ட போலீசார் கூறியதாவது: வெயில், மழை பாராமல் நாங்கள் பணியாற்றி வருகிறோம். தற்போது மழை பெய்து வரும் நிலையில் சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போது மலையில் நனைய வேண்டிய நிலை உள்ளது. இதை அறிந்த எஸ்.பி அனைவருக்கும் ரெயின் கோட் வழங்கி உள்ளார். ரெயின் கோட் மட்டும் இன்றி போலீசாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட போலீஸ் எஸ்.பி செய்து வருகிறார் என்றனர்.



