நாகர்கோவில், செப். 08 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான திருக்கோயில்களில் ஒன்றாக நாகர்கோவில் அருள்மிகு ஸ்ரீ நாகராஜா திருக்கோயில் விளங்கி வருகிறது. இத்திருக்கோயிலில் ஆவணி மாதத்தில் வருகின்ற அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் மிக முக்கியமான விஷேசமான நாளாகும். இந்நாளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் குறிப்பாக பெண்கள் இத்திருக்கோயிலுக்கு அதிகளவில் வந்து பால் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தி அருள்மிகு ஸ்ரீ நாகராஜாவை தரிசித்து வழிபட்டு செல்வார்கள்.
இதனை முன்னிட்டு நேற்று அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் பி.சி. அன்பழகன், தோவாளை தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவருமான முத்துக்குமார், மாநகராட்சி உறுப்பினரும், குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக்சயாகண்ணன், மாநகர தெற்கு பகுதி கழகச் செயலாளர் வழக்கறிஞர் முருகேஷ்வரன், வட்ட கழகச் செயலாளர் ராமச்சந்திரன், அகில பாரத சேவா சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



