திருப்பூர், செப்டம்பர் 15 –
தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் முப்பெரும் விழா திருப்பூர் உள்ள புஷ்பா நகர் தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது.
இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது புதிய உறுப்பினர்கள் இணைப்பு விழா தையல் எந்திரம், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், அரிசி, மளிகை சாமான், துண்டு, வேட்டி, சேலை உள்ளிட்டவை அடங்கிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முனைவர் ரபிக் சேர்மன், சேவரத்தின முனைவர் விஜயலட்சுமி தலைமையிலும் பட பட தேசியத் துணைச் செயலாளர் டாக்டர் யுவராஜ், தமிழ் மாநில தலைவர் சதாசிவம், மாநில பொதுச் செயலாளர் ருக்மணி தேவி, தலைமைச் செயலாளர் சாந்தகுமார், மாநில துணைத்தலைவர் சித்ரா, மாநில செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாவட்ட தலைவர் நாகராஜ் மாநில ஒருங்கிணைப்பாளர் அஷ்ரப் அலி, மாநில இளைஞரணி தலைவர் கோபால கிருஷ்ணன், மேற்கு மண்டல செயலாளர் மணி, மேற்கு மண்டல தலைவர் ஆதி செல்வராஜ், மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.



