தென்தாமரைகுளம், ஜூலை 30 –
குமரி மாவட்டம் மலங்கரை கத்தோலிக்க மார்த்தாண்டம் மறைமாவட்டம் ஹெல்த் பார் ஒன் மில்லியன் ஹோம் சுய உதவிக்குழு ஆண்டு விழா நடைபெற்றது.
அருள் தந்தை அஜிஸ்குமார் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் லீலாபாய் ஆண்டறிக்கை வாசித்தார். பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், கவுன்சிலர் கான்ஸ்டன்டைன், திமுக நிர்வாகி தாமரை பிரதாப் வாழ்த்துரை வழங்கினர்.
ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி, முத்து லெட்சுமி, லிஸ்பன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.