தென்காசி, மே – 02,
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ள சூழ்நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் பொது மக்களின் நலன் கருதி தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது தண்ணீர் பந்தலை தென்காசி உதவி காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர் திறந்து வைத்தார்.