தென்காசி, ஜுலை 3 –
ஓரணியில் தமிழ்நாடு என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஓரணியில் தமிழ்நாடு என்றால் என்ன என்பதை விளக்கமாக கூறினார்.
திமுகவைச் சார்ந்த நிர்வாகிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக பொது மக்களுக்கு செய்த நலத்திட்ட உதவிகளை எடுத்துரைக்க வேண்டும். மேலும், புதிதாக திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டுவது, மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை திமுக உறுப்பினர்களாக மாற்ற வேண்டும். எந்தக் கட்சியிலும் உறுப்பினர்களாக இல்லாதவர்களை திமுக செய்த சாதனைகளை எடுத்துக் கூறி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வைக்க திமுக நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எப்பொழுது திறக்கப்படும் என்று கேட்டதற்கு விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் தென்காசிக்கு வருகை தருவார். அப்பொழுது திறக்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். பத்திரிகையாளர் சந்திப்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர் ஆகியோர் உடன் இருந்தனர்