திருவள்ளூர், ஜூலை 29 –
திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக சேவை பணியில் சிறந்து விளங்கும்
டாக்டர் ராஜேந்திரன் 1968-69 காலகட்டத்தில் சிஎஸ்ஐ கௌரி மேல்நிலைப் பள்ளியில் படித்து தனது வாழ்க்கையை தொடர்ந்துள்ளார். தொடரப்பட்ட அன்று நாள் முதலே பல்வேறு சமூகத் தொண்டுகளை இந்நாள் வரை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
இதனை பாராட்டும் வகையில் சமூக சேவை பணியில் சிறந்து விளங்கும் டாக்டர் எஸ். ராஜேந்திரனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் சாதனையாளர் விருது வழங்கி
பாராட்டு செய்தனர். மேலும் தன்னுடன் பயின்ற மாணவர்கள், சக நண்பர்கள் பேட்ச் ரியூனியன் பாராட்டு விழாவினை நடத்தி மகிழ்ந்தனர்.
விழாவானது நண்பர்களான இ. சுப்பிரமணியம் பட்டாபிராமன் ஆகியோர் தலைமையில்
சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவரும் இந்நாள் தாளாளருமான செல்வராஜ் மற்றும் 1968-69 பேஜில் பயின்ற 30 க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.