மார்த்தாண்டம், ஜூலை 30 –
குமரி மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சி பகுதிகளில் சாலை பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி திருவட்டார் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ரூ.85.36 கோடி மதிப்பிலான சாலை பணியினை துவக்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில்: நமது மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 29 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.24.21 கோடி மதிப்பில் 44.966 கிலோ மீட்டர் நீளத்தில் 35 சாலை பணிகளும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.07 கோடி மதிப்பில் 4.886 கிலோ மீட்டர் நிளத்தில் 2 சாலை பணிகளும், நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 13 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.7.58 கோடி மதிப்பில் 22.646 கிலோ மீட்டர் நீளத்தில் 13 சாலை பணிகளும், சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.44.01 கோடி மதிப்பில் 39 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 76.387 கிலோ மீட்டர் நீளத்தில் 59 பணிகளும், மாநில பகிர்வு நிதி திட்டத்தின் கீழ் 6.48 கோடி மதிப்பில் 10 பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 12 பணிகள் 11.357 கிலோ மீட்டர் நீளம் என மொத்தம் ரூ.85.36 கோடி மதிப்பில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு 121 பணிகள் 160.242 கிலோ மீட்டர் நீளத்திற்கு பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார் (கிள்ளியூர்), தாரகை கத்பட் (விளவங்கோடு), உதவி இயக்குனர் பேரூராட்சிகள் இராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் பாண்டிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.