திருப்பூர், ஜூலை 30 –
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் நாரணாபுரம் கிராமம் க.ச.எண் 104, 105, 106,107 2000 க்கும் மேற்பட்ட மக்கள் அறி வெளி நகரில் பல வருடங்களாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். அவர்கள் நரிகுறவர்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினர்களாக உள்ளனர். நீண்ட நாட்களாக பட்டா வேண்டி விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்த போது மேற்படி இடமானது மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் உள்ளது என தெரியவருகிறது. இதில் மேய்ச்சல் மற்றும் மந்தைவெளி புறம்போக்கில் வீடுகட்டியுள்ள மொத்த இடத்திற்கும் ஈடாக திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை வட்டம் தளி கிராமத்தில் சுமார் 17 ஏக்கர் பூமியை வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
மேலும் இது சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் முதன்மை செயலர் /நில நிர்வாக ஆணையர், சேப்பாக்கம், எழிலகம், சென்னை அவர்களுக்கு 04.02.2021- 68 5.5.20376 / 2020 / 21 கடிதம் மூலம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு அரசின் பரிசீலணையில் உள்ளது. ஆகவே இது சம்பந்தமான உரிய உத்தரவுகளை அவசர அவசியம் கருதி அமைச்சர் அவர்கள் நில நிர்வாக ஆணையர் அவர்களுக்கு பரிந்துரைத்து பட்டா வழங்க ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
எம்எல்ஏ செல்வராஜ் உடன் தொழில்நுட்ப அணி சூர்யா, எம் எல் ஏ உதவியாளர் பக்குருதீன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பார்த்திபன் உடன் இருந்தனர்.