திருப்பூர், ஜூலை 29 –
ராயபுரத்தில் தி.ஹோம்ஸ் என்ற பெயரில் குழந்தைகளுக்கான இறக்குமதி பொருட்கள்
பிரத்யேக ஷோரூம் திறப்பு; கோவை முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை திறந்து வைத்தார். திருப்பூர் ராயபுரத்தை அடுத்த சூசையபுரம் விரிவு பகுதியில் உள்ள ஜியோ
டவர் கட்டிடத்தில் தி. ஹோம்ஸ் என்ற பெயரில் குழந்தைகளுக்கான இறக்குமதி பொருட்களின் பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. ஷோரூம் திறப்புவிழா மற்றும் இணையதள தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றது.
விழாவுக்கு வந்தவர்களை தி. ஹோம்ஸ் உரிமையாளர்கள் ஜியோ ஏ.என். செல்வராஜ், ஆ. சுரேஷ், எஸ்.ஆர். மகாலட்சுமி, ஜெ. ஹரி வசந்த், எம். அஜிதா ஹரி ஆகியோர் வரவேற்றனர். எம்.எல்.ஏ.க்கள் க. செல்வராஜ், கே.என். விஜயகுமார், மேயர் ந. தினேஷ்குமார், துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுவி டெக்ஸ் புவனேஸ்வரி செல்வராஜ் குத்துவிளக்கேற்றினார். இதில் நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கோவை முன்னாள் எம்.எல்.ஏ. சேலஞ்சர் துரை ரிப்பன் வெட்டி ஷோரூமை திறந்து வைத்தார். தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் எம். சுப்பிரமணியம் முதல் விற்பனையை தொடங்கி வைக்க விகாஸ் வித்யாலயா கல்வி குழுமம் மற்றும் வித்யாசாகர் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியின் சேர்மன் ஆண்டவர் ஏ. ராமசாமி முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.
தி. ஹோம்ஸ் ஷோரூம் குறித்து உரிமையாளர்கள் கூறியதாவது: 6 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமில் இறக்குமதி ஸ்டேஷனரீஸ், குழந்தைகள் விளையாட்டு மற்றும் உபயோகப் பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், பூஜை, திருமணம், தீபாவளி உள்ளிட்ட விசேஷங்களுக்கான இறக்குமதி பரிசுப்பொருட்கள் என வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர வாடிக்கையாளர்களின் ஆர்டரின் பெயரிலும் பொருட்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம், திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா ஏ. சண்முகம், டெக்மா முன்னாள் தலைவர் கே.பி. கோவிந்தசாமி, கொங்குநாடு விவசாயிகள் கட்சி மாநில தலைவர் கொங்கு வி.கே. முருகசேன், தி.மு.க. வடக்கு மாநகர செயலாளர் ஈ. தங்கராஜ், ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் ஆர். நாகராஜ், தி.மு.க. மாநில நிர்வாகி பரணி மணி, 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் கொ. ராமதாஸ், முன்னாள் நகர பொறுப்பாளர் சு. சிவபாலன், வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ். மணி உள்பட
தொழிலதிபர்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.