திண்டுக்கல், ஜூலை 01 –
திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் பாண்டியாஸ் ஹாக்கி கிளப் சார்பாக இரண்டாம் ஆண்டு ஆண்கள் ஐவர் ஒருநாள் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 13 அணிகள் பங்கேற்றனர். இதில் இறுதி போட்டியில் பாண்டியாஸ் – பி அணியினர் 4 -2 என்ற கோல் கணக்கில் ராக்போர்ட் அணியினரை வென்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஹாக்கி திண்டுக்கல் மாவட்ட தலைவர் நாட்டாண்மை Dr.Ln.N.M.B. காஜாமைதீன் கலந்து கொண்டு முதல் பரிசை வென்ற பாண்டியாஸ் – பி அணிக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுத்தொகையை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஹாக்கி திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ராமானுஜம், பொருளாளர் விக்டர்ராஜ், ஜி.டி.என். கல்லூரி பேராசிரியர் அருண், குணா மற்றும் பாண்டியாஸ் கிளப் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.