தென்காசி, செப். 27 –
காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை தரம் தாழ்ந்து பேசும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இளைஞர் காங்கிரஸ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ் எம் எஃப் அப்துல் காதர் விடுத்துள்ள கண்டன அறிக்கை கூறியிருப்பதாவது: எடுத்ததற்கெல்லாம் ஏழை விவசாயி பாட்டாளி என மேடைக்கு மேடைக்கு முழங்கும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை “ஒட்டு போட்ட சட்டை ” என மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசி இருப்பது அரசியல் மேடை நாகரீத்தை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.
முன்னாள் முதலமைச்சரும் தற்போது எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு நாளும் பொய்களயே திரித்து பேசி நாட்டு மக்களை நம்ப வைக்கலாம் என கனவு காண்கிறார் உள்ளபடியே மேடை நாகரிகத்தை முதலில் அவர் கற்றுக் கொள்ளட்டும் எங்களது இயக்க தலைவர் அவர் கூறியபடியே கிழிந்த ஒட்டு துணிகளை அணிந்திருந்தாலும் அவர் கூறியது போல அனைத்து வசதிகளும் கூடிய பேருந்துகளிலும் சொகுசு குளிர்ச்சியூட்டும் பங்களாக்களிலும் தங்கி தமிழக மக்களை சந்தித்து வரும் தலைவர் என்ற அந்தஸ்து கூட விசுவாசம் இல்லாமல் இருக்கின்ற பழனிச்சாமி அடித்தட்டு மக்களின் வாழ்வின் கஷ்டங்களையும் அன்றாடம் படும் இன்னல்களையும் எப்படி தெரிந்து இருக்க இயலும்.
உள்ளபடியே எங்களது இயக்க தலைவர் பெருந்தலைவர் காமராஜரின் தொண்டன் என்பதால் அன்றாடம் அல்லல்படும் அடித்தட்டு மக்களின் கஷ்ட நஷ்டங்களை கண்டறிந்தவர் அந்த கஷ்ட நஷ்டங்களுக்காக ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்தால் கூட ஒரு எதிர்க்கட்சி செவிமடுத்து குரல் கொடுக்காத அனைத்து கோரிக்கைகளையும் தமிழக முதல்வர் இடம் கோரிக்கை வைத்து ஏழை மக்களுக்காக அரும்பாடு பட்டு வருகிறார். ஆனால் தன்னுடைய இயக்கத்தையும் காப்பாற்ற முடியாமல் தான் காலில் விழுந்து பதவிக்கு வந்தவர்களுக்கூட விசுவாசம் கொள்ளாமல் தன் கையில் ஏதோ மந்திரக்கோல் கிடைத்துவிட்டது போல் அதிமுகவை காப்பாற்ற அங்கும் இங்கும் அலைந்து நீதிமன்ற படிக்கட்டுகளிலும் தேர்தல் ஆணைய அலுவலகத்திலும் ஏறி இறங்கி வருவதுடன் அவருக்கு பிடிக்காதவர்களை எல்லாம் நீக்கி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகக்கி வருகிறார்.
தனது கட்சியை கூட காப்பாற்ற மாற்றான் தோட்டத்தில் போய் யோசனை கேட்டு வரும் புதிய விவசாயி இவர். டெல்லி அமித் ஷா மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மணிக்கணக்கில் முக்காடு போட்டு சிகிச்சை எடுத்து வருகிறார் . ஆனால் எங்களை வழி நடத்தும் தமிழக காங்கிரஸ் பேரியக்க தலைவர் செல்வப் பெருந்தகை அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் திடகாத்திரத்துடனும் அறிவுபூர்வமாக சிந்தித்து மக்கள் மத்தியில் அரசியல் செய்து வருகிறார் ஏழைகளுக்காகவே போராட்டங்களை நடத்தி வருகிறார் நித்தமும் ஒரு கொள்கை தினமும் ஒரு கட்சி என்று கொக்கரிக்கின்ற பழனிச்சாமி அவர்களே முதலில் மாற்று கட்சி நிர்வாகத்தை பற்றியோ அந்தக் கட்சியின் தலைவர்களின் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியோ கொச்சைப்படுத்துவதை நிறுத்திவிடுங்கள் இல்லையென்றால் உங்கள் அவதூறு பேச்சுக்கு இளைஞர்கள் காங்கிரஸ் மேலும் பல்வேறு போராட்டங்களை நடத்தும் என தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அறிக்கையில் அப்துல் காதர் தெரிவித்துள்ளார்.



