திருவள்ளூர், ஜூலை 24 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட நில அளவை ஆய்வாளரிடம் தான் செய்த பணி தவறுதலாக பணிபுரிந்தமை குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்ட கேள்விக்கு ஒன்றுமே கூறாமல் அமைதியாக நின்றதால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
பின்பு மாவட்ட ஆட்சியர் நில அளவை ஆய்வாளரை அத்தனை பேர் இருந்ததை கூட பார்க்காமல் தவறுதலாக பணி செய்வதை கண்டுபிடித்தால் சஸ்பெண்ட் செய்வதாக கூறி வெளியேற்றினார். மாவட்ட ஆட்சியர் இவ்வாறு கடிந்து கொண்டு பேசியதால் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை துறை அதிகாரிகளும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.