தருமபுரி, ஆகஸ்ட் 16 –
தருமபுரி ஔவையார் அரசினர் மகளிர் மேல் பள்ளியில் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக சார்பில் மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளி சார்பில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பேனா, பாக்ஸ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மே. அன்பழகன், உறுப்பினர்கள் வெல்டிங் ராஜா, டி.எ. குமார், அன்பழகன், காசிநாதன், சுருளி ராஜன் மற்றும் இரு பாலர் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மலர்விழி தேசிய கொடி ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேலாளர், பொது மேலாளர், வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.



