நாகர்கோவில் ஜூலை 14
தமிழக அரசின் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 15.07.2026 அன்று காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட அளவில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 15.07.2026 ஆம் நாளன்று நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற உள்ளது. ஒரு போட்டிக்கு இரண்டு மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
போட்டிக்கான தலைப்புகளாக, கட்டுரைப்போட்டிக்கு ‘ தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை’ என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டிக்காக
- நான் விரும்பும் தமிழ்நாடு,
- அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய
நவீன தமிழ்நாடு, - இளைஞர்களின் தமிழ்நாடு,
- கல்வியில் சிறந்த தமிழ்நாடு,
- வீரம் செறிந்த தமிழ்நாடு என்ற தலைப்புகளிலும் நடக்கிறது.
கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10,000/-, 2ம் பரிசுத் தொகை ரூ.7,000/-, 3ம் பரிசுத் தொகை ரூ.5,000/- என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும். பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை (ம) பேச்சுப்போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.07.2026 ஆம் நாளன்று நாகர்கோவில் புனித ஜோசப் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 11.00 மணிக்கு நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்தல் வேண்டும். மேலும் விவரங்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்புக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (தொலைபேசி எண் 04652 – 234508) தொடர்பு கொள்ளலாம்.
போட்டிகளில் முதல்பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறலாம். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சென்னையில் சூலை 18 அன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெறும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ மாணவிகள் இப்போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெறவேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.


