வேலூர், ஆகஸ்ட் 11 –
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வு ஊதியர் நல அமைப்பின் சார்பில் முதல் மாநில மாநாடு வேலூர் சட்டக் கல்லூரி சாலையில் உள்ள பி.டி.எம். மஹாலில் மாநில அமைப்பாளர் பா. ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பு குழு தேவகுமார், வரவேற்பு குழு தலைவர் எம். பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். மாநில தலைவர் நெ.இல. சீதரன் துவக்க உரையாற்றினார்.
உடன் மாநில நிதி காப்பாளர் எஸ். கனகராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 70 வயது முடித்த அனைவருக்கும் 10 சதமான ஓய்வூதிய உயர்வு வழங்கிட வேண்டுமென்றும் தொகுப்பூதிய மதிப்பு புதிய அவுட்சோர்சிங் ஊழியர்களையும் தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன போன்ற 22 தீர்மானங்கள் முதல் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.



