மயிலாடுதுறை, ஜூலை 30 –
மயிலாடுதுறையில் உள்ள ஆர்.ஹெச்.வி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களை தேர்ந்தெடுத்து கபடி போட்டிக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது. தமிழ்நாடு கபடி அணியில் பங்கேற்பதற்காக மாணவர்களை உருவாக்கி வரும் இந்த அகாடமியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். கபடி பயிற்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மயிலாடுதுறை மாவட்ட அளவிலான குரு வட்ட போட்டியில் முதலிடம் பிடித்துள்ளனர். இரண்டு ஆண்டுகளாக மாநில போட்டியில் பங்கேற்று உள்ளனர்.
குறுவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை இந்த ஆண்டு தமிழக கபடி அணியில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு பயிற்சியாளர் கார்த்திகேயன் என்பவரால் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கபடி பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகள் ஆர்.ஹெச்.பி. ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் தலைவரும், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளருமான ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.