தஞ்சாவூர், ஆகஸ்ட் 4 –
தஞ்சாவூர் மாநகராட்சி கீழ வீதி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் “கண்ணொளி காப்போம்” திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுக்கு கண் பரிசோதனை நடை பெற்றது.
அப்போது மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டார். உடன் முதன்மை கல்வி அலுவலர் (பொ)மாதவன், பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.