By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
சேலம்தமிழ்நாடு

சேலம் மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

Last updated: July 31, 2026 6:40 pm
July 31, 2026
5 Views
Share
SHARE

சேலம், ஜூலை 31 –

தமிழக அரசின் சார்பில் சேலம் மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் செட்டிச்சாவடி பகுதியில் திடக்கழிவு மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த மையத்தில் நாள்தோறும் தூய்மை பணியாளர்கள் மூலமாக வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக உயிரி இயற்கை எரிவாயு தயாரிக்கும் மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடித்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அஸ்தம்பட்டி மண்டலத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு உணவின் தரம், பணியாளர்கள் விவரம், தினசரி உணவிற்கு வருகை தரும் பொதுமக்கள் குறித்த விவரம், உணவு பட்டியல், உணவு விற்பனை விலை விவரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். உணவருந்த வருகை புரிந்த பொது மக்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து கேட்டறிந்தார். அஸ்தம்பட்டி கோட்டம் சேலம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த மையத்தில் நாள்தோறும் பயன்பெறும் பணியாளர் எண்ணிக்கை மற்றும் என்ன வகையான உணவு வழங்கப்பட்டு வருகிறது என்ற விவரங்களையும், உணவின் சுவை குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் வெங்கடப்பன் சாலை அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பயிலும் குழந்தைகள் எண்ணிக்கை குறித்தும், குழந்தைகளின் கற்றல் திறன் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, குழந்தைகளின் எடை, உயரம் சரியாக உள்ளதா என்பது குறித்தும் அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்து குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து குமாரசாமிப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தை பார்வையிட்டு படுக்கை வசதி, புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு, பிரசவத்திற்கு பின் கவனிக்கும் முறை, மருந்தகம், ஆய்வகம் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் மரவனேரி பகுதியில் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருவது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் அம்மாபேட்டை மண்டல அணைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், மன்னார் பாளையம் பிரிவில் வர்மா கார்டன் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளையும், வர்மா கார்டன் பகுதியில் செயல்பட்டு வரும் அறிவியல் பூங்காவின் செயல்பாடு குறித்தும், வாய்க்கால் பட்டறை பகுதியில் செயல்பட்டு வரும் தெரு நாய்களுக்கான பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கலந்தாய்வு மேற்கொண்டார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர் கருத்தரங்கு; முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
தேசிய அளவிலான தடகளப் போட்டி; அரசு பள்ளி ஆசிரியை சாதனை
கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
மேகதாது அணை கட்டுவதை மத்திய, மாநில தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி கைகளில் கருகிய பயிர்களுடன் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கிளை கள வீரர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

மானாமதுரை தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம்

May 22, 2025
43 Views
மதுரையில் அரசு மருத்துவமனையின் அவலம்
குமரியில் அனைத்து பகுதிகளிலும் தெரு விளக்குகள்: கலெக்டர் அறிவுறுத்தல்
அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கூலித் தொழிலாளி விஷம்அருந்தி சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account