மயிலாடுதுறை, ஜூலை 22 –
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் செம்பனார்கோவில் குமரன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 27-ம் ஆண்டு ஆடி கிருத்திகை பால் குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கீழ முட்டு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், பெண்கள் உட்பட பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.