சிவகங்கை, ஆக. 07 –
சிவகங்கையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 7- ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சிவகங்கை நகர் மன்றத் தலைவர் சி.எம். துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் சிலைக்கு அவர் மாலையிட்டார். பின்பு கட்சிப் பொறுப்பாளர்களும், நகர் மன்ற உறுப்பினர்களும் மாலைகள் போட்டனர். அப்போது கூடியிருந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கலைஞர் வாழ்க அறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக!! என்று தொடர்ந்து கோஷமிட்டனர் .
இதேபோல் சிவகங்கை நகரில் உள்ள 27 வார்டுகளிலும் கலைஞரின் உருவப்படத்தை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வுகளில் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜெயராமன், மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர் மந்தக்காளை, நகரப் பொருளாளர் முத்துராக்குசேர்வை உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .