கடையல், ஜனவரி 15 –
கன்னியாகுமரி மாவட்டம், சிற்றாறு-1 அணை நுழைவு வாயில் அருகே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கடையல் பேரூராட்சி சார்பாக “இங்கு குப்பைகளை கொட்டாதீர்கள்” என்ற எச்சரிக்கை பலகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் மர்ம நபர்கள் அந்த எச்சரிக்கை சுவரொட்டியை கிழித்தெறிந்துள்ளனர்.
மேலும் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்பகுதியிலேயே விட்டுச் செல்கின்றனர். எனவே, பொது இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாவதைத் தடுக்க போலீசார் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று கடையல் பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



