கோவை, ஜூலை 6 –
கோவை மாவட்டம் போத்தனூர் சாலையில் உள்ள தனியார் திருமண அரங்கில் சமூகத்திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பெண்கள் ஊசி முனையில் வறுமையை விரட்டுவோம் என்ற கருத்துடன் ஊசியில் துணிப்பைகளை தைத்து சாதனை முயற்சி செய்தனர். மேலும் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு உலக சாதனை முயற்சி, நெகிழி ஒழிப்பு உறுதிமொழி, மகளிர் வாழ்வாதார மேம்பாடு, அரசு நலத்திட்டங்கள் குறித்த விளக்கம், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பெண்களுக்கு விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவை குறிச்சி பிரிவு வியாபாரிகள் நல சங்கம், கோயம்புத்தூர் ஜே சி ஐ மெட்ரோ போலீஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



