சிவகங்கை, ஜுலை 5 –
சிவகங்கை வாலிபர் மரணம் சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவிகள் குறித்து கேட்டு அறிந்து தனது பங்களிப்பாக பாதிக்கப்பட்டவரின் சகோதரர் நவீன் குமார், தாயார் மாலதி ஆகியோரிடம் நிதி உதவி வழங்கினார். இறந்த அஜித் குமார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் திருப்புவனம் உறவின் முறை தலைவர் முரளிதரன், செயலாளர் வேல்முருகன், துணை செயலாளர் சந்திரன், சமத்துவ மக்கள் கழக பொருளாளர் கண்ணன், வடசென்னை மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், வில்லியம்ஸ், நாடார் பேரவை இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மதுரை திவாகர், ஆர்கே நகர் பகுதி செயலாளர் ராஜேஷ், மாவட்ட அவை தலைவர் ஜார்ஜ் ஸ்ரீவைகுண்டம், தொகுதி செயலாளர் சதீஷ், நாடார் சங்கங்களில் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன் மற்றும் நாடார் பேரவை, சமத்துவ மக்கள் கழகம் நிர்வாகிகள் திருப்புவனம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் மதுரை ஆகிய பகுதியில் இருந்து நிர்வாகிகள் உறவின் முறை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.