கோவை, செப். 15 –
தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் படி National Lok Adalat எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற துவக்க நிகழ்வானது கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா பங்கேற்று நிகழ்ச்சியினை துவக்கி வைத்தும் மோட்டார் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தொகை காசோலையை வழங்கினார். உடன் கோவை மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் R. பாலகிருஷ்ணன், மாவட்ட நீதிபதி விஜயா, ஜெகதீஷ் கோவை மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.



