கோவை, ஜூலை 09 –
தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர்கள் கூட்டமைப்பு மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர்கள் மற்றும் விமான நிலையம் உரிமையாளர் பணிக்கு நிலம் கொடுத்தவர்கள், மாநில தங்க நகை தொழிலாளர் சங்கம், மகளிர் சுய உதவி குழுக்கள், அடுக்கு மாடி குடியிருப்பு சங்கம், ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடந்தது. அனைத்து தொழில் கூட்டமைப்பு சார்பில் பேசிய நிர்வாகி 2022 பிப்ரவரி முதல் மின் கட்டணம் உயர்வு, அதேபோன்று நிலை கட்டணமும் உயர்ந்துவிட்டது. இதனால் தொழில் துறை பாதித்துள்ளது. 2500 நிறுவனங்கள் உள்ளன.
தொழில்துறை வரி 400 சதவீதம் உயர்ந்து உள்ளது. குப்பை வரி நீக்க வேண்டும். குடிநீர் கட்டணமும் உயர்ந்து விட்டது. இந்தியாவில் உள்ள செல்களில் 60 சதவீத மில் கோவையில் உள்ளன. அம்மன் குளம் கூட்டமைப்பு சார்பில் பேசிய பெண், அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு சுழல் நிதி 20 ஆயிரம் கொடுத்ததை இப்போது 10 ஆயிரம் ஆக குறைத்து விட்டார்கள். வட்டி மானியத்தையும் கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு தேவையான நிறைய திட்டங்களை நாங்கள் கொடுத்தோம். உணவும் நீரும் மிகவும் முக்கியம். எனவே உணவு உற்பத்தியை பெருக்க அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுத்து அதற்காக விருது பெற்றோம்.
தங்க நகை உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆபரண தங்கம் நகை உற்பத்தியில் இந்தியாவிலேயே கோவை முக்கிய இடம் வகிக்கிறது என்று கூறினார்கள். இங்கு தங்க நகை பூங்கா அமைக்க நடவடிக்கை எடுத்தோம். திமுக ஆட்சியில் அதை நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் தங்க நகை பூங்கா அமைக்கப்படும். சிறு, குறு தொழில் முனைவோர் மின்சார நிலை கட்டணம் 64 சதவீதமாக உயர்த்தி விட்டது என்றார்கள். இதை குறைக்க அதிமுக ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு பேசிய அனைவர் குறைகளையும் அதிமுக ஆட்சி அமைந்ததும் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன் எம்எல்ஏ, கே.ஆர். ஜெயராமன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் செம வேலுச்சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.