பூதப்பாண்டி, ஆகஸ்ட் 13 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள திடல் ரெத்தினபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோ. இவரது மனைவி மல்லிகா (45) என்பவர் நேற்று மாலை சுமார் 5.OO மணியளவில் தனது பக்கத்து வீட்டில் உள்ள இரு பெண்களுமாக சேர்ந்து மொத்தம் மூன்று பேராக ரெத்தினபுரத்திலுள்ள பெரியகுள படித்துறையில் சென்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த குளத்தினுடைய படித்துறையில் இறங்கி அவர்களுடைய கால்களை கழுவுவது போல் சென்று மல்லிகாவின் கழுத்தில் கிடந்த செயினை பிடித்து இழுத்துள்ளனர்.
அவர் தனது இரு கைகளாலும் கழுத்தினுடைய இரண்டு புறமும் செயினை பிடித்து வைத்து கூச்சலிட்டார். அவருடன் இருந்த பெண்களும் அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். எனினும் வந்தவர்கள் அந்த செயினை விடாது பிடித்து இழுத்ததில் செயின் மூன்று துண்டுகளாக அறுந்துள்ளது. அதில் அவர்கள் கையில் கிடைத்த ஒரு துண்டு செயினுடன் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடம் வந்து விசாரித்து வருகிறார்கள். குளிக்க சென்ற பெண்ணிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பானது.


