குலசேகரம், ஜூன் 28 –
குலசேகரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக சரவணகுமார் உள்ளார். ஜூன் 23 அன்று மாலை எஸ்ஐ சரவணகுமார் மற்றும் இரண்டு போலீசார் என மூன்று பேர் குலசேகரம் அருகே உள்ள உண்ணியூர்கோணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திற்பரப்பிலிருந்து குலசேகரம் நோக்கி அதி வேகமாக பைக் ஒன்று வந்துள்ளது. சரவணகுமார் சாலையில் நின்று கைகாட்டினார். ஆனால் பைக் ஓட்டிய நபர் நிறுத்தாமல் வேகமாக செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் எஸ்ஐ மீது மோதுகிறது. இதில் எஸ்ஐ மற்றும் பைக்கில் இருந்த 2 பேர் என மூன்று பேரும் கீழே விழுந்தனர். இதில் எஸ்ஐ க்கு உடலில் காயம் ஏற்பட்டது. பைக் ஓட்டி வந்த சசிகுமார் என்பவர் காயமடைந்தார். உடனே போலீசார் எஸ்ஐ சரவணகுமாரை குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பைக்கில் வந்தவர்கள் குலசேகர அரசு மருத்துவமனை சிகிச்சைக்கு சென்றனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.