தென்காசி, ஆக. 27:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு பாஜக அனைத்து பிரிவுகளின் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அனைத்து பிரிவுகளின் மாநில அமைப்பாளர் ராகவன், தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து மத்திய அரசின் சாதனைகள் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை மாநில நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்களுக்கு நயினார் நாகேந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் பாஜக அனைத்து பிரிவுகளின் மாநில நிர்வாகிகள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



