நாகர்கோவில், செப்டம்பர் 24 –
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம் இன்று (24ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் எண் 16128 குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படுவது செப்டம்பர் 24 முதல் 29ம் தேதி வரை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி ஜங்ஷன், திருச்சி ஜங்ஷன் வழியாக செல்லும்.
மேலும் மதுரை ஜங்ஷன், சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் ஜங்ஷன், மணப்பாறை செல்லாது. கூடுதலாக அருப்புக்கோட்டை, மானாமதுரை ஜங்ஷன், சிவகங்கை, காரைக்குடி ஜங்ஷன், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.


