களியக்காவிளை, ஜுலை 24 –
குமார கோவில் அருகே சின்மய மிஷன் ஆஸ்ரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்ரமம் சார்பில் சத்சங்கம், பூஜைகள், குழந்தைகளுக்கு கோடைகால கலாசார பண்பாடு முகாம்கள், பஜனை, மக்கள் சேவை, பள்ளிகளில் கீதை ஒப்புவித்தல் போட்டி உள்ளிட்ட ஆத்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அத்துடன் மனதிர்களின் வாழ்க்கை/வாழ்வாதாரம் மேன்படுத்தும் விதமாக ஆரி பயிற்சி அறிமுகம் நடக்கிறது.
இந்த பயிற்சி முகாமானது ஜூலை 26-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 3-ம் தேதி வரை குமாரகோவில் சின்மயா மிஷன்l கிளையில் நடைபெற்று முடியும். பயிற்சி முகாம் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் நடக்கிறது. பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடக்கிறது. இந்த பயிற்சி முகாமில் ஒவ்வொரு வேளைகளிலும் 15 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை பிரம்மச்சாரி விக்னேஷ் ஜி மற்றும் சரஸ்வதி ஜீ, நல்வழி சங்கை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


