நாகர்கோவில், நவம்பர் 25
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: குமரி மாவட்ட கலெக்டர் தலைமையில் நாஞ்சில் கூட்ட அரங்கில் வரும் 28ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணிக்கு மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
எனவே, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் இதர அரசு துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள், தேவைகள் அடங்கிய மனுக்களை 28ம் தேதி நடக்கும் கூட்டத்தில் நேரில் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிற அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறைவாரியாக தனித்தனி மனுக்களாக வழங்கிட வேண்டும். 28ஆம் தேதி பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அதன் விபரங்கள் அடுத்த கூட்டத்தில் தெரிவிக்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


