விளாத்திகுளம், ஆகஸ்ட் 1 –
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு பிரச்சார பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்: காலதாமதத்திற்கு பொறுத்தருள வேண்டும் என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இந்த பகுதியில் விவசாயிகள் அதிகம் இருப்பதால் தான் இந்த விவசாயிக்காக காத்து இருந்தது மகிழ்ச்சி. விளாத்திகுளம் அதிமுக கோட்டை இயற்கை சீற்றங்கள் போது விவசாயிகளுக்கு ரூ.400 கோடி நிவாரணம் தந்தது அதிமுக அரசு.
விவசாயிகள் பயன்பெறும் வகையில் நீர் நிலைகளில் குடி மராமத்து பணிகளை மேற்கொண்டது அதிமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதை நிறுத்திவிட்டது.
அது மட்டுமல்ல குடிமராமரத்து பணிகள் செய்யும் போது அதிலிருந்து கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தது அதிமுக அரசு.
விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் ஏற்றம் பெற்றது அதிமுக ஆட்சியில் தான்.
மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்கி விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது அதிமுக அரசு ரூ.156 கோடி இழப்பீடாக நிவாரணம் வழங்கியது. அதுமட்டுமின்றி மக்காச்சோளத்தை அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்காமல் இருக்க ரூபாய் 45 கோடியில் விவசாயிகளுக்கு பூச்சி மருந்து வழங்கியது அதிமுக அரசாங்கம். விலையில்லா ஆடு, மாடு மக்களுக்கு வழங்கியது அதிமுக அரசு.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் வீடு இல்லாத மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலம் வாங்கி கான்கிரீட் வீடு கட்டித் தருவோம். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தின் அகராதியில் ஏழை இல்லை என்ற நிலையை உருவாக்குவோம். மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக தமிழகம் இருக்கும். நான் கிராமத்தில் பிறந்தவன் என்பதால் மக்களின் அனைத்து கஷ்டங்களும் எனக்கு தெரியும். உங்களுடன் நான் இருக்கிறேன். ஏழை, எளிய மக்கள் பயன்படுவதற்காக அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இலவச வேஸ்டி, சேலை முழுமையாக வழங்கப்படும். அதுமட்டுமல்ல தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை இலவசமாக வழங்கப்படும்.
தைப்பிறந்தால் வழிபிறக்கும் என்பது போல கொரோனா காலத்தில் ரூ. 2500 பொங்கல் பரிசாக அதிமுக அரசு கொடுத்தது. மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அம்மா லேப்டாப் கொடுக்கப்பட்டது. அது திமுக ஆட்சி நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டமும் தொடரும். நானும் அரசு பள்ளியில் படித்த மாணவன் என்பதால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி பெறுவதற்காக அரசு பள்ளி 7.5 மாணவர்கள் மருத்துவ உள் இட ஒதுக்கீடு கொடுத்த காரணத்தினால் 41 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் இன்று மருத்துவ கல்லூரி பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிமுக ஆட்சியில் தாமிரபரணி – வைப்பாறு இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு நிலம் எடுப்பு பணிகள் நடைபெற்றது. திமுக ஆட்சியில் அது கைவிடப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் தாமிரபரணி வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
இந்நிகழ்வில் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு, முன்னாள் எம்.எல்.ஏ கள் சின்னப்பன், என்.கே. பெருமாள், மோகன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர்கள் தனஞ்செயன், முனிய சக்திராமச்சந்திரன், வரதராஜ பெருமாள், நகரச் செயலாளர்கள் மாரிமுத்து, ராஜகுமார், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ் தனஞ்செயன், தனவதி, போடுசாமி, மகளிர் அணி சாந்தி, பிரியா உட்பட அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.