கிருஷ்ணகிரி, ஜூலை 25 –
கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில் 16-ம் ஆண்டு நபிகள் நாயகம் சல் அவர்களின் பிறந்தநாள் மிலாடி நபிகள் விழாவை முன்னிட்டு 20 இஸ்லாமிய ஜோடிகளுக்கு இறை பெயரால் இலவச நிக்காஹ் என்கிற திருமணம் விழா நடைபெறும். விழாவிற்கு தகுதியுள்ள மணமக்கள் தொடர்பு கொள்ளவும்.
மணப்பெண்ணுக்கு வெள்ளி கால் கொலுசு, மணமகனுக்கு கை கடிகாரம், மணமகளுக்கு புடவை ஒன்று, மணமகனுக்கு பேன்ட், சட்டை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, சோபா செட், டிரெஸ்ஸிங் டேபிள், மணமகளுக்கு அலங்கார பொருட்கள், கேஸ் அடுப்பு, ஸ்டீல் குடம், பக்கெட் இரண்டு, தட்டு 6, கிண்ணம் 6, கரண்டி 4, டம்ளர் 6, சொம்பு 2, டீ டம்ளர் 4, சமையல் பாத்திரம் ஒரு செட்டு, ஸ்பூன் 6, குடம் 2, பிளாஸ்டிக் டப்பா 3, பாய் 8, ஜக்கு 2, குடை 1, சோப்பு டப்பா 2, காலணி 2 ஜோடி, புர்கா 1, நான் ஸ்டிக் தவா 1 உள்ளிட்ட பொருட்களை மணமக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது என கிருஷ்ணகிரி திமுக நகர கழக பொறுப்பாளர் அஸ்லாம் ரகுமான் ஷெரிப் தெரிவித்துள்ளார்.