நாகர்கோவில் மே 15
கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல் விவசாயம் நடைபெற்று வந்தன இதே போன்று வாழை தென்னை உள்ளிட்ட விவசாய பயிர்கள் மாவட்டம் முழுவதும் 80,000 ஏக்கருக்கு மேல் விவசாயம் நடைபெற்று வந்தன. அண்மை காலமாக விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறியதன் காரணமாக இந்த விவசாய நிலங்களின் அளவு குறைந்து வருகிறது. தற்போது நெல் விவசாயம் வெறும் 7000 ஏக்கர் மட்டுமே நடைபெற்று வருகிறது ஆக விவசாயம் நாட்கள் செல்ல, செல்ல, அரசின் திட்டங்களால் பாழ் பட்டு வருகிறது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியின் 49 – வது வார்டுக்கு உட்பட்ட சித்திரை திருநாள் மகாராஜாபுரம் ஊர் பகுதியில் கால்வாய் வழியாக தண்ணீர் கடலில் சென்று கலந்து வந்தது. எனவே வழியோர கிராமங்களில் கால்வாய்களில் இருந்து வருகின்ற தண்ணீரை நம்பியே விவசாயம் நடைபெற்று வந்ததது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் வலம்புரி விளை குப்பை கிடங்கு அருகிலிருந்து செல்லும் தண்ணீரை குழாய்கள் மூலம் கடலில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது . இதில் பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் வரும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அதனை குழாய்கள் வழியாக தண்ணீரை கொண்டு செல்லும் திட்டத்தால் வழியோர கிராமங்களில் தண்ணீர் கிடைக்காமல் கிட்டத்தட்ட இப்பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்படும் எனக் கூறி சித்திரை திருநாள் மகாராஜாபுரம் ஊர் மக்கள் திரண்டு வந்து முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.