கன்னியாகுமரி, ஜூன் 29 –
தமிழ்நாடு முழுவதும் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் சத்துணவு மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட காணிமடம் துணை சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமினை அஞ்சுகிராமம் பேரூராட்சி கவுன்சிலர் இராஜ பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் கிராம சுகாதார செவிலியர் கல்பனா தேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



