By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்பாடியில் 102 கோடியில் கட்டப்பட உள்ள சுற்றுச்சாலைக்கு மாவட்ட ஆட்சியர், வேலூர் எம்பி அடிக்கல் நாட்டினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காட்பாடியில் 102 கோடியில் கட்டப்பட உள்ள சுற்றுச்சாலைக்கு மாவட்ட ஆட்சியர், வேலூர் எம்பி அடிக்கல் நாட்டினர்
தமிழ்நாடுவேலூர்

காட்பாடியில் 102 கோடியில் கட்டப்பட உள்ள சுற்றுச்சாலைக்கு மாவட்ட ஆட்சியர், வேலூர் எம்பி அடிக்கல் நாட்டினர்

Last updated: March 5, 2026 6:45 pm
March 5, 2026
40 Views
Share
SHARE

வேலூர், மார்ச் 05 –

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், பெரியபுதூர் கிராமம் முதல் கரிகிரி கிராமம் வரை 102.63 கோடி மதிப்பீட்டில் 74 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படவுள்ள பகுதி-1 நிலை-அ, வேலூர் சுற்றுச்சாலை பணியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

நிதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் & வனத்துறை அமைச்சர் 14.03.2025 சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வேலூர் மாவட்டத்தில் வேலூர் சுற்று வட்டச்சாலை பகுதி-1 அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த சாலை அமைக்கும் பணிக்காக நில ஆர்ஜிதம் செய்ய 98.25 கோடிக்கு நெடுஞ்சாலை (ம) சிறு துறைமுகங்கள் துறை மூலம் நிர்வாக அங்கீகாரம் பெறப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கதிர் ஆனந்த்: காட்பாடி மக்களின் நீண்ட கால கோரிக்கையான சுற்றுச்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இத்திட்டம் காட்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலை காட்பாடி சன்பீம் பள்ளி அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தொடங்கி காரணம்பட்டு வரை சுமார் 19 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. சுமார் 125 முதல் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சாலை பணிகள் நடைபெறவுள்ளன.

​இத்திட்டத்தை முடிக்க அரசு ஒன்றரை ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியுள்ளது. இருப்பினும், அதற்கு முன்னதாகவே பணிகளை முடிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சாலையால் காட்பாடியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்படும்.

​தற்போது சித்தூரிலிருந்து வரும் வாகனங்கள் காட்பாடி வழியாகச் செல்வதால் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, சித்தூர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை விரைவில் திறக்கப்படும். அதன் பிறகு காட்பாடிக்குள் கனரக வாகனங்கள் வருவது குறைந்து போக்குவரத்து சீராகும்.

​காட்பாடியில் நிலவும் போக்குவரத்து சிக்கலுக்கு மற்றொரு முக்கிய காரணியான ரயில்வே மேம்பாலம் குறித்த கேள்விக்கு: ஏற்கனவே இருந்த பழைய ரயில்வே மேம்பாலம் 2 கோடி ரூபாய் செலவில் ‘கார்பன் டெக்னாலஜி’ மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு சார்பில் சுமார் 45 முதல் 50 கோடி ரூபாய் செலவில் இரண்டாவது புதிய மேம்பாலத்திற்கு டெண்டர் விட்டுள்ளது. தற்போது மண் பரிசோதனை மற்றும் வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலை மற்றும் மேம்பாலப் பணிகள் நிறைவடையும் போது, காட்பாடி நகரின் கட்டமைப்பு மேம்படுவதுடன் பொதுமக்களின் பயண நேரமும் பெருமளவு குறையும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தேசிய அளவிலான தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி
சுசீந்திரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் வெளிநடப்பு போராட்டம்
நண்பர்கள் டிரஸ்ட் மகளிர் அணி நடத்திய தன்னார்வ இரத்ததான முகாம்
குழித்துறையில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்
திமுக எங்களுக்கு எவ்வித அழுத்தத்தையும் கொடுக்கவில்லை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

செல்போன் கடை உரிமையாளருக்கு பாதுகாப்பற்ற சூழல்

July 15, 2024
91 Views
மத்திய அரசின் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது
மது எலக்ட்ரிகல்ஸ் கடை திறப்பு விழா
தஞ்சாவூரில் காவலர் தினத்தையொட்டி போலீசார் உறுதிமொழி ஏற்பு
பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account