தென்காசி, ஜூலை 10 –
தென்காசி மாவட்டம் இலத்தூரில் அமைந்துள்ள காஞ்சி மகான் ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியில் பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. அருகில் உள்ள கிராமத்து மக்கள் மற்றும் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அருள் பிரசாதமும் மற்றும் பிரசாதமும் வழங்கப்பட்டது.
வருகிற ஆடி மாதம் சுவாமிகளுக்கு குருபூஜை நடைபெறுகிறது. அந்நாளில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் அன்னதானமும் நடைபெறுகிறது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மேலும் இக்கோயிலில் வழிபடும் பக்தர்களுக்கு நோய் நொடி பிரச்சனைகள் மற்றும் கடன் பிரச்சனைகள் குடும்ப பிரச்சினைகள் தீர்வாகிறது என்று சிவனடியார்கள் கூறியது வியப்பை தந்தது. அழகிய கிராமிய சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்தது.