ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 7 –
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருள்மிகு கலசலிங்கம் பார்மசி கல்லூரி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து “மருந்தகம் மற்றும் மருந்துத் துறையில் சமீபத்திய முன்னேற்றம்” என்ற தலைப்பில் சர்வதேச தொடர் கல்வி மாநாடு தலைவர் முனைவர் கே. ஸ்ரீரிதரன் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் என். வெங்கடேஷன் நிகழ்ச்சியை விவரித்து அனைவரையும் வரவேற்றார். முதன்மை விருந்தினர், மூத்த பயன்பாட்டு நிபுணர், தொழில்நுட்ப வளைகுடா கழகம், மனாமா-பஹ்ரைன் ஜுஃபைர், ஷாஹுல் ஹமீத் முகமது,
மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார். ஓசூர், ஏவிபி, நவால் லேப் இணை துணைத் தலைவர் பாலமுருகன் சேதுரத்தினம் மற்றும் சென்னை நியாமா நிறுவன இயக்குநர் எல். கருணாகரன் ஆகியோர் தற்போதைய மருந்து துறை வளர்ச்சி பற்றி சிறப்புரை ஆற்றினர். பேராசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்று பயனடைந்தனர்.