கமுதி, ஆகஸ்ட் 9 –
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மேட்டுத்தெரு உச்சமாகாளியம்மன் கோவிலில் மேட்டுத்தெரு இளைஞர் மறுமலர்ச்சி மன்றத்தின் சார்பில் 48-ம் ஆண்டு ஆடித்திருவிழா நேற்றிரவு குண்டாற்றில் இருந்து மேளதாளம் முழங்க பொதுமக்கள் ஊர்வலமாக சென்று கும்பம் எடுத்து வந்து செலுத்தி அம்மனுக்கு காப்புகட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து விழாவில் வரும் ஆடி 30 வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு பொங்கல் விழாவும் 31 ந்தேதி சனிக்கிழமை காலை திரளான பொதுமக்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானமும் நடைபெறும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.