கன்னியாகுமரி , அக் : 14
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் முன்பு இருந்து வரும் 15ஆம் தேதி காலை காளிமலை சமுத்திரகிரி ரத யாத்திரை தொடங்குகிறது.
நவராத்திரி மற்றும் துர்காஷ்டமியை முன்னிட்டு நடைபெறும் இந்த யாத்திரை, மூன்று நாட்கள் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று, 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள காளிமலையில் நிறைவடைகிறது.
அங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட உள்ளனர். இதனை காளிமலை சமுத்திரகிரி யாத்திரை விழாக்குழு நிர்வாகிகள் தெரிவித்தனர்.



