நாகர்கோவில்,அக்: 09
கட்டுமானப் பொருட்களான மணல், சிமெண்ட், எம்-சாண்ட், ஜல்லி உள்ளிட்டவற்றைச் சிறிய சரக்கு வாகனங்கள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்குக் கொண்டு செல்ல உரிய அனுமதி வழங்கக் கோரி, நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
மாநகர மாவட்டத் தலைவர் சிவபிரபு தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் எளிய அனுமதி மற்றும் பாஸ் நடைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும், சீல் வைக்கப்பட்ட வியாபாரிகளின் நிலையை மறுபரிசீலனை செய்து, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் நவீன்குமார், வினு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



