கிருஷ்ணகிரி, ஜுலை 4 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள மாவனட்டி சேர்ந்த கட்டிட தொழிலாளி சிவராஜ் என்பவரது மகன் ரோகித் (13), 8ம் வகுப்பு படித்து வந்தநிலையில் நேற்று ரோகித்தை மர்மநபர்கள் கடத்தி சென்றுள்ளனர். அதே ஊரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் கடத்தப்பட்ட கார் நின்று மற்றொரு காரில் சென்ற தகவல் கிடைத்த நிலையில் ரோகித்தின் பெற்றோர் அஞ்செட்டி காவல்நிலையத்தில் நேற்றிரவு புகார் அளித்துள்ளனர். போலீசார் நடவடிக்க எடுக்கவில்லை எனக்கூறி ரோகித்தின் உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சிறுவனின் ஊரான மாதேவன் (22) மற்றும் உனிசேநத்தம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஆகிய இருவரை போலீசார் விசாரித்ததில் ஒகேனக்கல் சாலை, அஞ்செட்டி அடர்வனப்பகுதியில் சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறியதை தொடர்ந்து வனப்பகுதியில் சிறுவன் உடலை மீட்டு போலீசார் கொலைக்கான காரணத்தையும் கொலையில் மேலும் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.