திருப்பூர், ஜூன் 30 –
தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்திலிருந்து 150 க்கும் மேற்பட்ட ஓபன் அண்ட் ஸ்பின்னிங் மில்களை சேர்ந்த உரிமையாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில் உரிமையாளர் சங்கம் தலைவர் அருள்மொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கடந்த மூன்று வருடங்களாக மின் உயர்வு காரணமாக ஓய் மில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 75க்கும் மேற்பட்ட ஓ.இ மில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு ஓ.இ மில்கள் பயனடையும் வகையில் புதிய ஜவுளி கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும்.
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநில ஜவுளி கொள்கையை போன்று ஓ.இ நூல்களில் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்களுக்கான மூலதனம் மானியமாக 40 முதல் 50 சதவீதம் வழங்க வேண்டும் என்றும் அதேபோல் நலிவடைந்த ஓ.இ மில்களுக்கு நடப்பு மூலதனமாக ஒரு கோடி வீதம் வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும்.
அதேபோல் மத்திய அரசு பஞ்சு இறக்குமதி வரி 11 சதவீதத்தை முழுமையாக நீக்க வேண்டும். விஸ்கோர்ஸ் பாலிஸ்டர் செயற்கை இழைக்கு விதிக்கப்பட்டுள்ள தர கட்டுப்பாட்டு விதியை உடனடியாக ரத்து செய்து பாலிஸ்டர் விஸ்கோர்ஸ் போன்ற ரகங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
(LT & CT – குறைந்த மின்னழுத்தத்தில் செயல்படக்கூடிய ஓ.இ மில்களுக்கும் – மின்னோட்ட மின்மாற்றியுடன் செயல்படக்கூடிய ஓ.இ மில் இணைப்புதாரர்களுக்கு ) பீக் ஹவர் கட்டணங்களை வசூல் செய்ய கூடாது என்றும் வங்கிகளில் கடன் வாங்கி தங்கள் நிறுவனங்களின் மேற் கூரை மீது ரூப் டாப் சோலார் நிறுவியுள்ள மின் இணைப்பதாரர்களுக்கு சர்சார்ஜ் கட்டணத்தை முழுமையாக நீக்க வேண்டும்.
அதேபோல் தமிழ்நாடு அரசு வரும் ஜூலை மாதம் முதல் அமல்படுத்த உள்ள மின்சார கட்டணம் உயர்வை ரத்து செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.