ஈரோடு, செப். 13 –
ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தயாரிப்பான மங்களம் வேப்பம் புண்ணாக்கின் முதல் விற்பனை தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தலைமை தாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் மங்களம் வேப்பம் புண்ணாக்கினை விவசாயிகள் அனைவரும் உபயோகித்து பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.
விழாவில் ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பா. ரவிச்சந்திரன், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க துணை பதிவாளர் து. ரவிச்சந்திரன், ஈரோடு சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் காலிதா பானு, கோபி சரக கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளர் முத்துசிதம்பரம், துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) மாதேஸ், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணைப்பதிவாளர் பிரகாஷ், ஈரோடு கூட்டுறவு நகர வங்கி துணைப்பதிவாளர் பி. ஜெயந்தி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைப்பதிவாளர் யசோதா தேவி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளர் பாலாஜி மற்றும் சங்க செயலாளர்கள், பணியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.



