By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்
கனஂனியாகுமரி

இரணியல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

Last updated: September 30, 2025 1:35 pm
September 30, 2025
33 Views
Share
SHARE

திங்கள்சந்தை, செப். 30 –

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி அடுத்த கரிஞ்சான்கோடு பகுதியை சேர்ந்தவர் பழனி (56). இவரது மனைவி கஸ்தூரி (53). இந்த தம்பதிக்கு சரண்யா (27), சச்சின் குமார் (26) என்ற மகளும் மகனும் உள்ளனர். பழனி தனது மனைவியின் தங்கை கணவருடன் சேர்ந்து கோயில்களுக்கு நேர்ச்சை தொட்டில் மற்றும் ஓம குண்டலத்திற்கான விறகுகள் தயாரிக்கும் மர வேலை தொழில் செய்து வருகிறார். கஸ்தூரி நாகர்கோவிலில் உள்ள ஒரு கிளவுஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

பழனிக்கு அதிக மது குடிக்கும் பழக்கம் இருந்து வருவதாக தெரிகிறது. மது போதையில் வரும் பழனி மனைவி கஸ்தூரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி கோபித்துக் கொண்டு பழனி வேறு ஊர்களுக்கு சென்று விடுவது உண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று கோபித்துக் கொண்டு சென்ற பழனி கடந்த ஜனவரி மாதம் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். பின் நேர்ச்சை தொட்டில் செய்யும் தொழிலை உறவினருடன் வீட்டில் வைத்து செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு பழனி அதிக மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்தபோது பழனியின் மைத்துனரான கஸ்தூரியின் தம்பி ராஜேந்திரன் (45) வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவர் டிவியில் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார். பழனி வந்ததும் சேனலை மாற்றி செய்திகள் சேனலை வைக்குமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. கோபித்துக் கொண்ட ராஜேந்திரன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தம்பி கோபித்துக் கொண்டதால் அவரை சமாதானப்படுத்த கஸ்தூரியும் கேட்டைத் திறந்து வெளியே வந்து ராஜேந்திரனை சமாதானப்படுத்தினார்.

அப்போது பின்னால் வந்த பழனி கஸ்தூரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே பழனி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி கஸ்தூரியின் இடுப்பில் குத்தியதாக தெரிகிறது. கஸ்தூரி அலறியபடி கீழே சரிந்தார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கஸ்தூரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனிடையே கஸ்தூரியை குத்தும்போது நிலை தடுமாறி விழுந்த பழனிக்கும் தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது. பழனி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார் கஸ்தூரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிகிச்சை பெற்று வரும் பழனியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மனைவியை கத்தியால் குத்தி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி
திருப்பதிசாரம்திருவாழ்மார்பன் கோயில்தேரோட்டம்
பெருஞ்சாணி நீர்மட்டம் 50 அடியாகிறது
கன்னியாகுமரி திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை
குழித்துறை நகராட்சி ஆணையாளரின் நெருக்கடி; நகராட்சி ஊழியர் தற்கொலை முயற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கருங்கல் : காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு தினம்

May 24, 2025
33 Views
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்
மைய நூலகத்தில் கழிவறை கட்ட அடிக்கல் நாட்டு விழா
பழைய குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி கோரி மனு
ஏழைகளுக்கு நோன்பு பரிசு: துணை மேயர் தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account