மார்த்தாண்டம், ஜூலை 15 –
ஆறுகாணி அருகே வெள்ளரிக்கில் மலை வட்டப்பாறை காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (54). இவர் பத்து காணியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் உதவி பணியாளராக இருந்தார். சமீபகரமாக தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடையவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்தவர் நேற்று இரவு வெள்ளரிக்கில் மலையில் உள்ள ஒரு கிணற்றில் தைவான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆறுகாணி போலீசார் பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட பாலசுப்பிரமணியத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.